தமிழ் மொழி - "இயேசு: இறைவன் & இரட்சகர்".mp4
Tamil Language - "Jesus: Lord & Saviour).mp4. //யோவான் 11
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந...
29 Minuten
Podcast
Podcaster
INDIAN MOST POPULAR LANGUAGES BY NUMBER(FROM No.1 TO No.12) / ===“Good News for All People”, "Words of Light", and "Songs og Life" // संख्या से सर्वाधिक बोली जाने वाली भाषाओं (१-१२) भारत में - ==="सभी लोगों के लिए अच्छी खबर", "प्रकाश के शब्द", और "जीव...
Beschreibung
vor 9 Jahren
Tamil Language - "Jesus: Lord & Saviour).mp4. //
யோவான் 1
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை
தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;
உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன்
மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது
அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்,
அவன் பேர் யோவான்.
7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த
ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச்
சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
9 உலகத்திலே வந்து எந்த மனுஷனையும்
பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய்
உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.
11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார்,
அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய்
அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய
பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
13 அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச
சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே
பிறந்தவர்கள்.
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும்
சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய
மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற
மகிமையாகவே இருந்தது.
15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து:
எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர்
என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர்
இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
16 அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும்
கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின்
மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும்
இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை,
பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
Weitere Episoden
4 Minuten
vor 9 Jahren
5 Minuten
vor 9 Jahren
3 Minuten
vor 9 Jahren
59 Minuten
vor 9 Jahren
In Podcasts werben
Kommentare (0)